திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற வருபவர்களை அலைக்கழிப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்..!

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் தடுக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற வருபவர்களை அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற வருபவர்களை மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் அலைக்கழிப்பதாகவும், உரிய மரியாதை கொடுக்காமல் அவமதிப்பு செய்வதாகவும், மருத்துவச் சான்று வழங்க நரம்பியல் மருத்துவர் அடாவடி போக்காக நடந்து கொள்வதாகவும், ஆர்டிஓ தலைமையில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை கோசங்களாக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...