கோவையில் மூதாட்டியின் கவனத்தை திசைதிருப்பி 7.5 பவுன் செயின் பறிப்பு

சாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் அரசு அதிகாரி எனக்கூறி 7.5 பவுன் தங்கச் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.


கோவை: சாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் அரசு அதிகாரி எனக்கூறி 7.5 பவுன் செயின் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் நெட்டயம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் இவரது மனைவி காளியம்மாள் வயது 70. இவர் கணவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்காக அவரை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார்.

நேற்று காலை அந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றார். அப்போது கோவிலுக்கு முன்பு டிப் டாப் உடையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்த ஒருவர் தான் அரசு அதிகாரி என்றும் கோவிலுக்குள் நகைகள் அணிந்து செல்ல அனுமதி இல்லை எனக்கூறினார்.

இதனையடுத்து மூதாட்டி தன் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க நகைகளைக் கழட்டி அந்த வாலிபரிடம் கொடுத்தார். அந்த வாலிபர் ஒரு காகிதத்தில் நகைகளை வைத்துக் கொடுத்தார். இதனைப் பெற்றுக் கொண்ட மூதாட்டி உள்ளே சென்று தனது கைப்பையைப் பார்த்தபோது அதில் நகைகள் இல்லை.

வாலிபர் தன்னை ஏமாற்றியது தெரிய வந்தது இது குறித்து மூதாட்டி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அரசு அதிகாரி என கூறி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் 7.5 தங்கச் செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...