கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பெரியக்கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை: கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை கரும்புக்கடை அருகே உள்ள சாரமேட்டை சேர்ந்தவர் யூசுப் (வயது 54). இவர் பெரியக்கடை வீதி அருகே உள்ள தியாகி குமரன்மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் கேரளமாநில காசர் கோட்டை சேர்ந்த நாசர் (47) என்பவரும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூசூப், நாசரிடம் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர் பலமுறை யூசூப்பிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணத்தைத் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். நேற்று இரவு 11 -மணியளவில் 2- பேரும் மார்க்கெட்டில் வைத்து மது குடித்தனர். போதை தலைக்கேறி நிலையில் 2 -பேருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் வாய் தகராறு ஏற்பட்டது.
பின்னர் இது கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த 2 -பேரும் அங்குக் கிடந்த உருட்டுக் கட்டையால் மாறி மாறி தாக்கினர். இதில் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் அந்த வழியாகச் சென்றவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் யூசுப் பரிதாபமாக இறந்தார். நாசர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெரியக்கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தியாகி குமரன் மார்க்கெட்டில் நள்ளிரவு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.