கிரிக்கெட் விளையாட சென்ற வாலிபர் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை: கிரிக்கெட் விளையாடச் சென்ற வாலிபர் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சிட்கோவை சேர்ந்தவர் ஸ்ரீ ராகவலு, இவரது மகன் ஸ்ரீ ரங்க ராஜ்லு வயது 24, பி.எஸ்.சி பட்டதாரியான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் ஸ்ரீரங்க ராயலு நண்பர்களுடன் செட்டிபாளையம் பகுதியில், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்றார். அங்கு நண்பர்களுடன் ரங்கராஜு ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக வீட்டிற்குச் சென்றார்.
அங்கு இருந்த போது மயங்கினார். இதனைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக ஸ்ரீ ரங்கராஜன் மீட்டு அந்த பகுதியில், உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஸ்ரீரங்க ராயலு இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.