கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு ரூ.17 லட்சம் அபராதம் விதிப்பு..!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.


கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு ரூ. 17 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 4,215 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. இதில் 781 சிவில் வழக்குகள் மாவட்ட தீர்ப்பு அலுவலர் மூலமாக 701 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு, ரூபாய் 77 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

582 கிரிமினல் வழக்குகளில் 157 விழக்குகளில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனையுடன் ரூ.33 இலட்சத்து 29 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 349 சில்லறை வணிகர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு, ரூபாய் 17 லட்சத்து 90 ஆயிரம் பெறப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.

உணவு தரம் இல்லாத பிளாஸ்டிக் பயன்படுத்திய 116 உணவு வியாபாரிகள் மீது ரூபாய் 2 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவு புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...