பொள்ளாச்சியில் வியாபாரிகள் சாலையோர கடைகளை தொடர்ந்து நடத்திட பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

தனிநபர் ஒருவர் வழக்கு தொடுத்ததின் பேரில், பொள்ளாச்சி நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் நடைபாதை வியாபாரிகளை கடைகளை எடுக்கச் சொல்லி வற்புறுத்துவதாக மனு அளித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் வியாபாரிகள் சாலையோர கடைகளை தொடர்ந்து நடத்திட முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி புதிய, பழைய பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி, தேர்முட்டி, ராஜா மில் ரோடு, பெருமாள் செட்டி வீதி போன்ற பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட சாலையோர உணவு விடுதிகள், பழக்கடைகள் பொள்ளாச்சி நகராட்சி மூலமாக வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டும், வியாபாரிகளை ஊக்குவிக்கும் விதமாக நடைபாதை வியாபாரிகள் நல வாரியம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு வங்கியின் மூலமாக முதல் தவணையாக 10 ஆயிரம் கடன் முதல் 20 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வியாபாரிகள் மாதாமாதம் தவணை தொகையை வியாபாரிகள் முறையாக செலுத்தி விடுகின்றனர்.

இந்நிலையில், தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின் பேரில், பொள்ளாச்சி நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் நடைபாதை வியாபாரிகளை கடைகளை எடுக்கச் சொல்லி வற்புறுத்துவதாகவும் இத்தொழிலை நம்பி வியாபாரிகள் குடும்பத்தார் கல்வி, மருத்துவம் வாழ்வாதாரத்தை நம்பி உள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் நலன் காக்க சாலையோர கடைகளை தொடர்ந்து நடத்திட முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ ராவ் அவர்களிடம் மனு அளித்தனர்.



இதில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜோம்ஸ்ராஜா, நகர பொருளாளர் வடுகை கனகு, வீராசாமி, நீலகண்டன், ரகுபதி, PRK குருமார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...