கோவையில் 20 வீடுகளில் திட்டமிட்டு திருடிய கில்லாடி திருடன் கைது..!

பணத்தை திருடி குடும்ப செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை வைத்து செலவு செய்து வந்துள்ளான்.


கோவை: கோவையில் 20 வீடுகளில் திட்டமிட்டு திருடிய கில்லாடி திருடனை போலீசார் கைது செய்தனர்.

கோவை மதுக்கரை குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் ஒரு லட்சம் ரூபாய் 5 பவுன் தங்க நகை, லேப்டாப் திருடிச் சென்றார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கில்லாடி திருடன் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ் (32) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் இவர் மீது சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளன. இவர்களை அயனாவரத்தில் தங்க வைத்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பணத்தை திருடி குடும்பத்துக்கு செலவுக்கு கொடுத்துவிடுவார். மீதமுள்ள பணத்தை வைத்து, இவர் செலவு செய்து வந்துள்ளார். பல முறை இவர் சிறைக்கு சென்று வந்தவர்.

மேலும் பல திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொட‌ர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...