தமிழகத்தில் ஆபரேஷன் ரவுடி வேட்டையில் 3,325 பேர் கைது - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்..!

மேலும், போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் 23 டன் கஞ்சா மற்றும் 20 கிலோ ஹெராயன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் 2021-ம் ஆண்டில் ஆபரேஷன் ரவுடி வேட்டை நடவடிக்கையால் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிஜிபி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக காவல்துறை கடந்த 2021ம் ஆண்டில் பல்வேறு சாவல்களை சந்தித்துள்ளது. ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இமானுவேல் சேகரன் நினைவுநாள், மதுரை தேர் திருவிழா, திருவண்ணாமலை தீபம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் அமைதியாக நடத்தப்பட்டன.

அதேபோல், தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்பட்டு, குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டது.

தென் தமிழகத்தில் நடைபெற்று வந்த சாதிய கொலைகள் மற்றும் வடதமிழகத்தில் நடைபெற்று வந்த ரவுடிகளுக்கிடையேயான பழிவாங்கும் கொலைகளைத் தடுக்க ‘ஆபரேஷன் ரவுடி வேட்டை' நடவடிக்கை எடுக்கப்பட்டு 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அவர்கள் வைத்திருந்த, 1,117 பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் 23 டன் கஞ்சா மற்றும் 20 கிலோ ஹெராயன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா 2ம் அலையினால், பணியில் இருந்த 139 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். வாரத்தில் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்ட காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த 2021ம் ஆண்டில் வாரிசுகள் 1,500 பேர் காவல்துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் காவலர்கள் பணியாளர்கள் 1,067 பேருக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறப்பட்டுள்ளது.

மேலும், 989 எஸ்.ஐ மற்றும் 10 ஆயிரம் கான்ஸ்டபிள் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவல்துறையால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறையை குறைத்தல், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் நடைபெற்று வரும் போதைப் பொருட்களின் பயன்பாடு, குற்றங்களுக்கு எதிரான சமரசமில்லாத நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் நடப்பு ஆண்டில் உள்ளது. இதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அமைதியான வாழ்வு மேற்கொள்வதை காவல்துறை உறுதி செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...