புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: ஆனைமலை அருகே கல்வி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து கோட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனைமலை தாலுக்கா கோட்டூர் பகுதியில் உள்ள அருணாச்சலம் நகரில் வசித்து வருபவர் ஜோசப் கருணாகரன்(59). இவர் பொள்ளாச்சி தெற்கு வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 30ம் தேதி புதுவருட கொண்டாட்டத்திற்காக தன் வீட்டைப் பூட்டிவிட்டு கோவையில் உள்ள தன் மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நேற்று நள்ளிரவு வீடு திரும்பிய போது வீட்டின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு பவுன் தங்க கைசங்கிலி மற்றும் லேப்டாப் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.