பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது..!

தலைமறைவாக இருந்த 23 வயது ஆட்டோ ஓட்டுனரை நேற்று நள்ளிரவு போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவர் தன் உறவினர் வீட்டில் தங்கி ஆட்டோ ஓட்டும் பணி செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த 16 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதை தன் பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்கள் அறிவுரையின் பேரில் சிறுமியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், விசாரணை செய்த போலீசார் தலைமறைவாக இருந்த 23 வயது ஆட்டோ ஓட்டுனரை நேற்று நள்ளிரவு கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...