மேலும், இசைக் கலைஞர்களுக்கு நலவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கோவை: கோவை பொள்ளாச்சியில் பாரம்பரிய இசைக் கலைகளை பாதுகாக்க வலியுறுத்தி மார்கழி மகா உற்சவம் இசை விழா நடைபெற்றது.
பாரம்பரிய இசைக் கலையை பாதுகாக்க வலியுறுத்தியும், இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், பொள்ளாச்சி சங்கீத சபா சார்பில் மார்கழி மகா உற்சவ இசை விழா நடைபெற்றது.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
இசை விழாவில் பாரம்பரிய இசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், வயலின் கருவிகளில் கலைஞர்கள் இசை அமைத்தும் மாணவிகள் கர்நாடக சங்கீத பாடல்களை பாடினர்.

பாரம்பரிய இசைக் கலையை பாதுகாக்கவும், அனைத்து கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்கவும் இசை விழா நடத்தப்படுகிறது.
சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற சபா நிகழ்ச்சிகளுக்கு அரசு உதவி வருகிறது.
பொள்ளாச்சி போன்ற சிறு நகரங்களில் சபாக்கள் நடத்த அரசு உதவ வேண்டும் மிருதங்கம், வீணை போன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் காப்பாற்றப்பட்டு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், இசைக் கலைஞர்களுக்கு நலவாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.