நாளை குடிநீர்‌ விநியோகம்‌ மீண்டும்‌ துவங்கும்‌ - கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ தகவல்

கான்கிரீட்‌ குழாயில் உடைப்பு காரணமாக துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, காளப்பட்டி, விளாங்குறிச்சி மற்றும்‌ குறிச்சி பகுதிகளில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ பாதிக்கப்பட்ட நிலையில், நாளை குடிநீர்‌ விநியோகம்‌ மீண்டும்‌ துவங்கும் என கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ தகவல்.


கோவை: குடிநீர்‌ விநியோகம்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர்‌ விநியோகம்‌ மீண்டும்‌ துவங்கும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

பில்லூர் அணையை நீராதாரமாக‌ கொண்ட கோவை மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பல்லடம்‌ நகராட்சி மற்றும்‌ 18-பேரூராட்சிகள்‌ மற்றும்‌ 940-ஊரகக்‌ குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர்‌ திட்டத்தின்‌ 1500-மி.மீ விட்டமுள்ள கான்கிரீட்‌ குழாயில்‌ 01.01.2022-அன்று அதிகாலையில்‌ கூடலூர்‌ பேரூராட்சியிலுள்ள செல்வபுரம்‌ என்ற பகுதியில்‌ உடைப்பு ஏற்பட்டது.



உடனடியாக கான்கிரீட்‌ குழாயிற்குப் பதிலாக 1500-மி.மீ எம்‌.எஸ்‌.சூழாய்‌ பதிக்கும்‌ பணிகள்‌ துவங்கப்பட்டு 03.01.2022-அதிகாலை சீரமைக்கும்‌ பணிகள்‌ நிறைவுறும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்‌ காரணமாகக் கோவை மாநகராட்சியின்‌ துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, காளப்பட்டி, விளாங்குறிச்சி மற்றும்‌ குறிச்சி பகுதிகளில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ பாதிக்கப்பட்டுள்ளது.

நாளை 03.01.2022-பிற்பகலில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ மீண்டும்‌ துவங்கும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...