கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 3 பேர் கைது

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம், சைபர் கிரைம் குற்றவாளியான நெய்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவரது மகன் இம்மானுவேல் ராஜன் (வயது-35) என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் இமானுவேல் ராஜன்(வயது-35) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின் படி சைபர் கிரைம் குற்றவாளியான இமானுவேல் ராஜன்(வயது-35) என்பவரைக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல், கோவை மாவட்டத்தில் தொடர் வீடு புகுந்து கொள்ளை வழக்கில் ஈடுபடுபவர்களை விரைந்து கண்டு பிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் கவியரசு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தொடர் வீடு புகுந்து கொள்ளை வழக்கில் ஈடுபட்ட சென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் மாணிக்கராஜ்@ராஜ் (வயது-36) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5-பவுன் தங்க நகைகள், ரூபாய் 1,00,000/- மற்றும் Tap-1 பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதேபோல், பெரிய நாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி மற்றும் அடிதடி குற்ற வழக்கு குற்றவாளியான மதன கிருஷ்ணன் என்பவரின் மகன் சத்தியா@சத்திய நாராயணன் (வயது-47) என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சத்தியா@சத்திய நாராயணன் (வயது-47) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின் படி தொடர் வழிப்பறி மற்றும் அடிதடி குற்ற வழக்கு குற்றவாளியான சத்தியா@சத்திய நாராயணன் (வயது-47) என்பவரைக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...