வீட்டிலிருந்து எடுத்து வந்த பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்று விட்டதாகவும், தங்களிடம் பணம் இல்லை என்றும் கூறியதாக தெரிகிறது. இதைக் கேட்டு சிறுவர்களின் பெற்றோர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை: ரூ.21-லட்சம், 22-பவுன் நகைகளுடன் மாயமான போத்தனூர் சிறுவர்கள் பிடிபட்டனர்.
கோவை போத்தனூர் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14-வயது மாணவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான 8-ம் வகுப்பு படிக்கும் மாணவருடன் மாயமானார். இவர்களை அவர்களின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. எங்க சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்பது தெரியாத நிலை இருந்தது.
இந்த நிலையில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவரின் தந்தை வீட்டில் வைத்திருந்த ரூ.21 லட்சம் ரொக்கப்பணம், 22 பவுன் தங்க நகை ஆகியவற்றைக் காணவில்லை. பணம் நகையைச் சிறுவர்கள் எடுத்துச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான 2 சிறுவர்களும் திருச்சியில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த 2 சிறுவர்களையும் மடக்கிப் பிடித்து கோவை அழைத்து வந்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது, வீட்டிலிருந்து எடுத்து வந்த பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்று விட்டதாகவும், தங்களிடம் பணம் இல்லை என்றும் கூறியதாகத் தெரிகிறது.
இதைக் கேட்டு சிறுவர்களின் பெற்றோர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கரும்புக்கடை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.