வால்பாறையில் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு..!

2022ம் ஆண்டு சிறப்பான ஆண்டாகவும், உலக சமாதானம் பெருகவும், கொரோனா போன்ற பெரும் நோய் தொற்றில் இருந்து உலக மக்களை பாதுகாக்கவும் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.


கோவை: வால்பாறையில் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

2022ம் ஆண்டு துவங்கும் நிலையில் புத்தாண்டை வரவேற்று ஆலயங்களிலும் கோவில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நெறிமுறைகளை கடைபிடித்து புத்தாண்டை கொண்டாடுவதற்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டது.

இந்நிலையில், புதிய ஆண்டை வரவேற்கும் வண்ணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள் ஆர் சி மற்றும் சிஎஸ்ஐ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.



ஆர்சி ஆலயத்தில் பொதுமக்கள் அரசு அறிவுறுத்தல் படி, கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து ஆலயத்தில் ஃபாதர் பிரார்த்தனை செய்து 2022 சிறப்பான ஆண்டாகவும், உலக சமாதானம் பெருகவும் கொரோனா போன்ற பெரும் நோய் தொற்றில் இருந்து உலக மக்களை பாதுகாக்கவும் வேண்டி பிரார்த்தனை செய்து 2022 ஆண்டினை வரவேற்றனர்.

மேலும், சிஎஸ்ஐ ஆலயத்திலும் அதேபோல் பொதுமக்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து, அங்குள்ள ஆயர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தும் உலக சமாதானம் பெருகவும் கொரோனா நோய் பரவாமல் மக்களை பாதுகாக்கவும் நல் ஆட்சி நடைபெறவும் பிரார்த்தனை செய்து 2022ம் ஆண்டை வரவேற்று பிரார்த்தனை செய்தனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...