கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு தங்க கவச அலங்காரம்..!

பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் இருப்பதற்காக, உடனுக்குடன் தீபாராதனை காண்பித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.



கோவை: கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.



2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள் தேவாலயங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கோவில்கள் தேவாலயங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் வழிபாட்டு தலங்களில் வழிபட்டு வருகின்றனர்.

கோவையில் நள்ளிரவில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் கோவையில் உள்ள இந்து கோவில்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு காலை முதலே மக்கள் கோவிலில் வழிப்பட்டு வருகின்றனர்.



கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகத்தினரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் இருப்பதற்காக உடனுக்குடன் தீபாராதனை காண்பித்து அனுப்பி வைக்கின்றனர்.

மேலும், கோவில் வளாகத்திற்குள் பொதுமக்கள் அமர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் உடனுக்குடன் சாமி தரிசனம் செய்துவிட்டு பொதுமக்கள் வெளியேறுகின்றனர்.



Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...