கோவையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இன்று முதல் முன்பதிவு தொடக்கம் - கோவை மாநகராட்சி.

கோவை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக அரசு பள்ளி மாணவர்கள் 22,800 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டம்.



கோவை: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருவதால், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. வரும் 3 ஆம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றுபிரதமர் அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 33 லட்சத்து 20 ஆயிரம் உள்ளனர். இவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3-ந் தேதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளுக்கே சென்று சிறுவர்களுக்கு நேரடியாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கோவை மாநகராட்சி பகுதியில் 15 முதல் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஜனவரி 10-ம் தேதி முதல் கோவையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும்கோவையில் முதற்கட்டமாக 15 முதல் 18 வயது வரை உள்ள 22,800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறோம். கோவை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக அரசு பள்ளி மாணவர்கள் 22, 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடியாக பள்ளிக்கு சென்று தடுப்பூசிகளை செலுத்த உள்ளோம். படிப்படியாக அடுத்த கட்டமாக கோவை மாநகராட்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பள்ளியிலேயே நேரடியாக தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதற்கான முன்பதிவுஇன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் சிறுவர்களை நேரடியாக ஆன்லைன் மூலம் கோவின் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொரோனா, ஒமைக்ரான் நோய்த்தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என தெரிவித்தனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...