மண்‌ வள பாதுகாப்பை வலியுறுத்தி 1,600-கி.மீ சைக்கிள்‌ பேரணி: மதுரையில்‌ ஈஷா தன்னார்வலர்கள்‌ வரவேற்பு

அழிந்து வரும்‌ மண்‌ வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன்‌ அவசியம்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதமாக மஹாராஷ்ட்ராவில்‌ இருந்து புறப்பட்ட சைக்கிள்‌ பேரணி மதுரை வந்தடைந்தது. அவர்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள்‌ சிறப்பான வரவேற்பு அளித்தனர்‌.


மதுரை: அழிந்து வரும்‌ மண்‌ வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன்‌ அவசியம்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதமாக மஹாராஷ்ட்ராவில்‌ இருந்து புறப்பட்ட சைக்கிள்‌ பேரணி இன்று (டிசம்பர்‌ 31) மதுரை வந்தடைந்தது. அவர்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள்‌ மீனாட்சி அம்மன்‌ கோவில்‌ அருகில்‌ சிறப்பான வரவேற்பு அளித்தனர்‌.

இந்த பயணத்தின்‌ நோக்கம்‌ குறித்து அக்குழுவினர்‌ கூறுகையில்‌, “நாங்கள்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ ஒரு பொது நலனை மையப்படுத்தி நீண்ட தூர விழிப்புணர்வு சைக்கிள்‌ பேரணி மேற்கொண்டு வருகிறோம்‌. அந்த வகையில்,‌ இந்த முறை ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு அவர்கள்‌ தொடங்க உள்ள கான்சியஸ்‌ பிளானட்‌' இயக்கத்திற்கு ஆதரவாகப் பயணம்‌ மேற்கொண்டுள்ளோம்‌.

சுற்றுச்சூழல்‌ மேம்பாட்டிற்காகப் பல ஆண்டுகளாகச் செயல்‌ செய்து வரும்‌ சத்குரு, இவ்வியக்கத்தின்‌ மூலம்‌ மண்‌ வள பாதுகாப்பு குறித்து உலக அளவில்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்‌. மண்ணில்‌ குறைந்தபட்சம்‌ 3-சதவீதம்‌ கரிம பொருட்கள்‌ இருந்தால்‌ தான்‌ அதை மண்‌ என குறிப்பிட முடியும்‌ என ஐ.நா அமைப்பு கூறியுள்ளது.

ஆனால்‌, இந்தியாவில்‌ சுமார்‌ 42-சதவீதம்‌ விவசாய நிலங்களில்‌ கரிமப்‌ பொருட்களின்‌ அளவு 0.5-சதவீதத்திற்கும்‌ குறைவாக உள்ளது. இதே நிலை நீடித்தால்‌ அடுத்த 50-ஆண்டுகளில்‌ பெரும்‌ உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள்‌ கூறுகின்றன.

மேலும்‌, மண்ணில்‌ போதிய சத்துக்கள்‌ இருந்தால்‌ தான்‌ அதில்‌ விளையும்‌ உணவுப்‌ பொருட்களில்‌ சத்து இருக்கும்‌. சத்தான உணவை உண்டால்‌ தான்‌ நாம்‌ ஆரோக்கியமாக வாழ முடியும்‌. ஆகவே, சுற்றுச்சூழலையும்‌, நம்‌ ஆரோக்கியத்தையும்‌ காக்க மண்‌ வளமாக இருப்பது மிகவும்‌ அவசியம்‌.

அதிகப்படியான மரங்கள்‌ வளர்ப்பது மற்றும்‌ இயற்கை விவசாயத்திற்கு மாறுவதன்‌ மூலம்‌ நம்‌ மண்‌ வளத்தை மீட்டெடுக்க முடியும்‌” என்றனர்‌. 25 தன்னார்வலர்களுடன்‌ கூடிய இக்குழுவினர்‌ மஹாராஷ்ட்ரா மாநிலம்‌ உத்கர்‌ நகரிலிருந்து டிசம்பர்‌ 19-ம்‌ தேதி தங்கள்‌ பயணத்தை தொடங்கினர்‌.

அங்கிருந்து கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக 4-மாநிலங்களைக் கடந்து தமிழ்நாட்டிற்கு வந்தனர்‌. காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கும்பகோணம்‌, புதுக்கோட்டை ஆகிய ஊர்கள்‌ வழியாக அவர்கள்‌ இன்று மதுரை வந்தனர்‌. பின்னர்‌, இங்கிருந்து புறப்பட்டு திருநெல்வேலி வழியாக ஜனவரி 2-ம்‌ தேதி கன்னியாகுமரிக்குச் சென்று தங்கள்‌ விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்கின்றனர்‌.

இக்குழுவினர்‌ கடந்த ஆண்டுகளில்‌, நதிகளை மீட்போம்‌ இயக்கம்‌, ஈஷா வித்யா பள்ளி, காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ ஆகியவற்றிற்கு ஆதரவாகச் சைக்கிள்‌ பேரணி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்‌.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...