கிணத்துக்கடவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளி 2-பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 500-ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததோடு வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: சூதாட்டத்தில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 500-ரூபாய் பணம் பறிமுதல் செய்ததோடு வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஆர்.எஸ். ரோடு பழைய ரயில்வே குடியிருப்பு பகுதியில், சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அருண்குமார் என்பது தெரியவந்தது.

இவர்கள் சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 500-ரூபாய் பணம் பறிமுதல் செய்ததோடு வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...