புத்தாண்டை முன்னிட்டு கோவையில் 45-இடங்களில் வாகன சோதனை சாவடிகள், தகராறு செய்தால் கைது- கோவை மாநகர காவல் ஆணையர்

மாநகரில் 45-இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய காவல் ஆணையர் குடிபோதையில் வாகனம் இயக்குதல், தகராறு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.



கோவை: மாநகரில் 45-இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய காவல் ஆணையர் குடிபோதையில் வாகனம் இயக்குதல், தகராறு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், இன்று இரவு கோவை மாநகரத்தில் அனைத்து காவல் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதோடு 1050-போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



மாநகரில் 45-இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய காவல் ஆணையர் குடிபோதையில் வாகனம் இயக்குதல், தகராறு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

11-சோதனை சாவடிகளில் 7-சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்கள் கண்காணிப்பு அலுவலகத்திலிருந்தே கண்காணிக்கப்பட உள்ளதாகவும் 44-இருசக்கர வாகனங்கள், 23-மொபைல் ரோந்து வாகனங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் கூறிய பிரதீப் குமார் சில மேம்பாலங்களில் நான்கு மணி நேரத்திற்குப் போக்குவரத்து தடை செய்யப்படும் எனவும், கோவில்கள், சர்சுகளில் வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதீப் குமார் வரும் காலங்களில் சமூக வலைத்தளங்களில் ஜாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாகப் பதிவு செய்தால், வழக்குப் பதிவு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் எனவும், கோவை மாநகரில் அமைதியைக் காப்பாற்றுவோம் எனவும், ஏற்கனவே கூறியது போன்று குழந்தைகள் பெண்கள் பாதுகாப்புக்கென முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், முதலில் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

தற்போது போக்சோவில் கைது செய்யப்பட்ட மூவர் உள்பட 70-பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் படி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சட்டப்படி எந்த அளவுக்குச் செல்ல முடியுமோ அந்த அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும், அதேசமயம் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

சமீபகாலமாகக் கோவை மாநகர இரவு நேரத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறிய பிரதீப்குமார் பேஸ் ரெகனைசேசன் சாப்ட்வேர் மூலம் கண்காணிப்படுவதை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு 1872- சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பட்டு குற்றங்கள் கண்டறியபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளில் முக்கிய வழக்குகளைத் தேர்வு செய்து துணை ஆணையர் அதிகாரத்திலான காவல்துறையினர் கவனம் செலுத்தி வருவதாகவும், கடந்த ஆண்டுகளில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இந்த ஆண்டு வெளியில் வந்தவர்களைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஐம்பது கிராம் கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டாலும் அந்த நபரின் தொடர்ச்சியாக உள்ள நபர்களைக் கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பான லிஸ்ட் எடுத்துள்ளதாகவும், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருட்கள், சாலை பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...