கோவையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி விவகாரம்: பள்ளி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளர் கார்த்திகா தலைமையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடைபெறும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் 8 வது நாளாக நடைபெற்று வருவதை கண்டித்து நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று அதே பள்ளியின் முன்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பள்ளியின் முன்புறம் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளர் கார்த்திகா தலைமையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடைபெறும் பள்ளியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 19 பேரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கைது செய்தனர்.

முன்னதாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட கோவை மாநகர காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் பயிற்சி நடைபெறும் பள்ளிக்கு வந்த நிலையில், பள்ளி வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்துத்துவ அமைப்பினரை பள்ளி வளாகத்திற்குள் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரனை இந்துத்துவ அமைப்பினர் தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு சூழல் நிலவியது. இதனையடுத்து,

பள்ளியின் முன்பாக உள்ள பேக்கரி உட்பட கடைகள் அடைக்கப்பட்டது.

காவல் துறையினருக்கும், இந்து அமைப்பினர் இடையே தள்ளு முள்ளு மற்றும் நாம் தமிழர் முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...