கோவை கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சிக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு கட்சியினர் முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இதுபோன்ற மதவெறியைத் தூண்டும் பயிற்சிகளை பள்ளிகளில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.



கோவை: கோவையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சாகா பயிற்சிக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு கட்சியின் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தனியார் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா பயிற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சாகா பயிற்சி நடைபெறும் பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.



இந்த நிலையில், இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அந்த பயிற்சி முகாமை பள்ளிகளில் நடத்துவதற்கு தடை விதிக்க வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில், கல்வி பயிலும் பள்ளிகளில் இதுபோன்ற மத சார்பிலான பயிற்சிகள் வெறுப்புணர்ச்சியை தூண்டும் என்றும் பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு பாஜகவினர் 300க்கும் மேற்பட்டோர் சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடத்தும் பொழுது கோவை மாவட்ட காவல்துறையினர் அமைதியாக இருந்துவிட்டு தங்களை ஆர்ப்பாட்டம் செய்வதற்கு கூட விடாமல் உடனடியாக கைது செய்ததாகவும் கூறினார்.

எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இதுபோன்ற மதவெறியைத் தூண்டும் பயிற்சிகளை பள்ளிகளில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...