கோவை அருகே உள்ள நல்லூர்வயல் மற்றும் குளத்துப்பாளையத்தில், ராஜேந்திரபாலாஜி குறித்து விருதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை நடத்தினர்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக, 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில், ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கியுள்ளனர்.
இதையடுத்து, தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க, 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரபாலாஜியை பிடிக்க, தனிப்படை போலீசார், பெங்களூர், கேரளா, டில்லியில் தேடிவருகின்றனர்.
இந்த நிலையில், கோவை அருகே உள்ள நல்லூர்வயல் மற்றும் குளத்துப்பாளையத்தில், ராஜேந்திரபாலாஜி குறித்து விருதுநகர் மாவட்ட தனிப்படை இன்ஸ்பெக்டர் ராமராஜ், மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ.,பாலமுரளி, ஆமத்துார் எஸ்.ஐ., கார்த்திக் மற்றும் ஐந்து காவலர் என 8 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
இப்பகுதியில், ''ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களிடம், விசாரணை செய்து வருகிறோம்,'' என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.