இதில், 4 படுக்கை வசதிகள் உட்பட அடிப்படை மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கோவை: கோவை மருதமலை கோவிலில் மருத்துவ முதலுதவி மையத்தினை காணொளி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ முதலுதவி மையத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

மருதமலை கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் இடம் அருகில் இந்த மருத்துவ முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முதலுதவி மையத்தில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், இரண்டு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.
மேலும், 4 படுக்கை வசதிகள் உட்பட அடிப்படை மருத்துவ உபகரணங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரேனுக்கும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த மையத்தைத் தொடர்புகொண்டு முதலுதவி பெறலாம்.
இந்த முகாமின் துவக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன், கோவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் உட்பட கோவில் நிர்வாகிகள் திமுகவினர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் அங்கு கட்டப்பட்டுள்ள மருத்துவ மையத்தை பார்வையிட்டு அங்கு பணிபுரிய உள்ள மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் எவ்வித முதலுதவிகள் வழங்கப்பட உள்ளது என்பன குறித்து கேட்டறிந்தார்.