கோவையில் கிராமங்களுக்குள் நுழையும் காட்டுயானைகள் மீது பட்டாசுகளை வீசி எறியக் கூடாது - வனத்துறையினர் எச்சரிக்கை..!

ஊருக்குள் காட்டு யானைகள் நுழைந்தால், உடனடியாக அப்பகுதியில் இருக்கும் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.


கோவை: கோவை பெரிய நாய்க்கம்பாளையம் அருகே கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளின் மீது பட்டாசுகளை வீசி எறியக் கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது.

கோவை புறநகர் பகுதிகளில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் மலையோர கிராமங்களில், தினசரி இரவு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கிராமங்களில் ஒரு சில இடங்களில், ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளின் மீது பட்டாசுகளை வீசி எறிகின்றனர். இதனால் காட்டு யானைகள் உடலில் தீக்காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஊருக்குள் காட்டு யானைகள் நுழைந்தால், உடனடியாக அப்பகுதியில் இருக்கும் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு தகவல் தெரிவித்தல் வேண்டும்.

யானைகளை விரட்ட பட்டாசுகளை வீசக்கூடாது. அவை வரும் பாதையின் ஓரத்தில் வெடிக்கலாம். யானைகளின் மீது பட்டாசு கொளுத்திவீசும் நபர்கள் மீது, வனத்துறை சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை வனச்சரகத்தில் நேற்று முன்தினம் மூன்று இடங்களிலும், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் தலா, 2 இடங்களிலும் சிறுமுகை வனச்சரகத்தில் ஒரு இடத்திலும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன.

இப்பகுதிகளில், மலையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...