கோவை சூலூர் விமானப்படை தளத்தின் தலைமை அதிகாரியாக சஞ்சீவ் பொறுப்பேற்பு..!

தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்த ஸ்ரீகுமார் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஏர் கமோடர் சஞ்சீவ் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை சூலுார் விமானப்படை தளத்தின் தலைமை அதிகாரியாக சஞ்சீவ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தென்னிந்தியாவில் அமைந்துள்ள பிரதான விமானப்படை தளங்களில் ஒன்றான கோவை மாவட்டம், சூலுாரில் தேஜஸ் இலகு ரக போர் விமானங்கள், ஏஎன் 32 விமானங்கள், எம்ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டர்கள் உள்ளன.

விமானப்படை விமானங்கள் மற்றும் படையினர் பயன்படுத்தும் கருவிகளை பழுது பார்க்கும் தளமும் செயல்பட்டு வருகிறது.

இந்த தளத்தின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்த ஸ்ரீகுமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஏர் கமோடர் சஞ்சீவ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை அதிகாரி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், ஏர் கமோடர் ஸ்ரீகுமார், தன் பொறுப்புகளை புது அதிகாரி சஞ்சீவிடம் ஒப்படைத்தார். ஏர் கமோடர் சஞ்சீவ், விமானப்படையின் போக்குவரத்து அணியை பராமரிப்பதில் மிகுந்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...