கோவை கிணத்துக்கடவு அருகே நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அனுப்பும் பணி தீவிரம்..!

கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு 2ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அரசம்பாளையம் நுகர்பொருள் வாணிபக் கழகம் கிடங்கிலிருந்து ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் திருநாளை ஒட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட நியாயவிலை கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியிலுள்ள நுகர்பொருள் வாணிபகழகம் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அந்தந்த நியாயவிலை கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.



இந்தப் பணிகளை கிடங்கு பொறுப்பாளர் கருணாநிதி, கண்காணிப்பாளர் சேகர், கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் முத்து, நகர்வு பொறுப்பாளர் கதிரேசன், செல்வராஜ் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.

கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு 2ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதன் பிறகு தமிழக அரசு அறிவிக்கும் நாட்களில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...