ஆழியாறு - வால்பாறை சாலை கவியருவி அருகே லாரி கவிழ்ந்து விபத்து - ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!

இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


கோவை: கோவை ஆழியாறு - வால்பாறை சாலை கவியருவி அருகே லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடலூரைச் சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ் (33). இவர் ஈச்சர் லாரி ஓட்டுனர். இவர் நேற்று கோயமுத்தூரில் இருந்து பொங்கல் பொருட்களை ஏற்றிக்கொண்டு வால்பாறையில் பொருள்களை இறக்கி விட்டு திரும்பி வரும் வழியில் லாரியில் பிரேக் ட்ரம் சூடாகி பிரேக் பிடிக்காமல் கவிஅருவி அருகே சொட்டு நீர் வளைவு என்னுமிடத்தில் மாலை 5.30 மணிக்கு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி வலது புறமாக கவிழ்ந்தது.



இதில் லாரி ஓட்டுனர் ரமேஷுக்கு சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தால் வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...