கோவையில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் துறை ஊழியர்களுக்கு விருது

ரோட்டரி கிளப் சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் துறை ஊழியர்களுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.


கோவை: ரோட்டரி கிளப் சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் துறை ஊழியர்களுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

அவிநாசி சாலை உள்ள தனியார் அரங்கில் ரோட்டரி 3201-சார்பில் கொரோனா காலத்தில் கோவை கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 60-அஞ்சல் ஊழியர்களுக்கு "சிறந்த போஸ்ட்மேன்" என்ற விருது வழங்கும் விழா நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராகக் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.



முன்னதாக இந்நிகழ்வில் பி.ஆர்.நடராஜன் பேசுகையில் "அஞ்சல் துறை ஊழியர்களைக் கௌரவிக்க வேண்டும் என்கிற சிந்தனையை ரோட்டரி கிளப்பிற்குச் சொன்ன நிர்வாகிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களுக்குப் பாலமாக இருப்பவர்கள் இந்த அஞ்சல் ஊழியர்கள். எங்களை யாருமே கண்டுகொள்ளவில்லை என்கிற அஞ்சல் துறை ஊழியர்களின் ஆதங்கத்தை அறிந்து இந்த விருது கௌரவிப்பு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.

எப்போதுமே தேசத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் தான் மக்களுக்கான சேவையை எந்த பேரிடர் காலத்திலும் தங்குதடையின்றி பணியாற்றும். வைரஸ் தொற்று காலத்தில் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் துறை, அரசு மருத்துவமனைகள் இவைகள்தான் மக்களுக்குச் சேவையாற்றியது.



உயிரைக் காக்கத் துணை நின்றது. ஆகவே தான் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். நாடு முழுவதும் 3760-அஞ்சல் அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. இதனைச் சொந்த கட்டடமாகச் செயல்படும்போது இந்த வாடகை பணம் பெரிய அளவுக்கு மிச்சமாகும்.

அந்த பணத்தை இத்துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும். இதனைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். சமீபத்தில் கூட நடைபெற்ற எங்கள் நிலை குழுக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வருடத்திற்கு ஒரு தபால் அலுவலகத்தை கட்டிக் கொடுப்பது என முடிவெடுத்தால் ஐந்து வருடத்தில் அனைத்து அஞ்சலகங்கள் சொந்த கட்டிடத்தில் நிமிர்ந்து நிற்கும். ஆனால் இதனைப் பல எம்பிக்கள் ஏற்க தயாரில்லை.

கடந்த முறை நான் உப்பிலிபாளையம் பகுதியில் ஒரு அஞ்சல் அலுவலகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த பின்பும் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசுக்கான கட்டிடத்தைக் கட்ட முடியாது என அந்த நிதியை திருப்பி அனுப்பிய சம்பவமும் உண்டு. எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் அஞ்சல் துறையோடு தொடர்பு இருக்கும்.

எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி மக்களின் வரிப்பணத்திலிருந்து ஒதுக்கப்படுகிறது. அதனை மக்களுக்குப் பாலமாக இருக்கிற பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் சில தளர்வுகள் வேண்டுமெனத் தொடர்ந்து எங்கள் மட்டத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம்.

உயிரைப் பணயம் வைத்து எத்தகைய பேரிடர் காலத்திலும் மக்களுக்குச் சேவையாற்றும் பொதுத்துறை நிறுவனங்களை பலப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் குரல் எழுப்பி வருகிறோம், போராடி வருகிறோம் என்றார்.

இதில் அஞ்சல் அலுவலகங்களின் கோயம்புத்தூர் பிரிவு, மூத்த கண்காணிப்பாளர் கே.கோபாலன், மற்றும் ரோட்டரி கிளப் நிர்வகிகள் கணேஷ் குமார், எஸ்.சுவாமிநாதன், சாண்டியாகோ ஜேசு, டாக்டர் மோகன சுந்தரம், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...