பல் மருத்துவரை மிரட்டி 5-பவுன் நகை, பணம் பறிப்பு

பல் மருத்துவரை மிரட்டி 5-பவுன் நகை, பணம் பறித்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து ரயில் பாதை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: சிறுநீர் கழிக்க சென்ற பல் மருத்துவரை மிரட்டி 5-பவுன் நகை, பணம் பறித்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து ரயில் பாதை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை பீளமேடு தண்ணீர்ப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி பவித்ரன் 35, பல் மருத்துவர். இவர் நேற்று இரவு ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனது மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

சிரியன் சர்ச் ரோட்டில் சென்ற போது வாகனத்தை நிறுத்திவிட்டு ரயில் பாதை ஓரம் சிறுநீர் கழிக்கச் சென்ற போது இருட்டான பகுதியில் மறைந்திருந்த 3-பேர் மருத்துவரை மிரட்டி நகை பணம் கேட்டனர்.

அதை தர மறுத்ததால் கோபம் அடைந்த 3-பேரும் ஹரி பவித்திரன் கழுத்தில் அணிந்திருந்த 5-பவுன் நகை 3,500-ரூபாய் ரொக்கம், இரண்டு ஏடிஎம் கார்டு, செல்போன் ஆகியவற்றைப் பறித்தனர்.

மேலும் அவர் அணிந்திருந்த ஆடைகளை மிரட்டி கழட்டினர். பின்னர் 3-பேரும் சிறிது தூரம் சென்று ஆடைகளை வீசிவிட்டு நகை பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றுடன் தப்பினர்.

தொடர்பாக ஹரிபவித்ரன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில் பாதை ஓரம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...