கோவையில் கீழே கிடந்த ரூ.8-ஆயிரம் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த விற்பனை பிரதிநிதி

அன்னூர் பகுதியில் கீழே கிடந்த ரூ.8070-ஐ நேர்மையாகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த விற்பனை பிரதிநிதிக்கு காவல் துறையினர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.


அன்னூர்: கீழே கிடந்த ரூ.8070 ஐ நேர்மையாகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த விற்பனை பிரதிநிதிக்கு காவல் துறையினர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (வயது 28). இவர் அன்னூர் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று வசூல் செய்த பணம் ரூ.8070 ஐ எடுத்துக்கொண்டு அன்னூர் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாகப் பணம் எங்கோ கீழே விழுந்துள்ளது. இதனை அறியாத அருண் பிரகாஷ் அலுவலகம் சென்று பார்த்த பொழுது பணம் கீழே விழுந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தான் வந்த வழிநெடுகிலும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அன்னூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதே நேரத்தில் சிறுமுகை நால்ரோடு காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 23). இவர் மசாலா பொடிகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் அன்னூர் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது கீழே பணம் கட்டாகக் கிடப்பதைக் கண்டுள்ளார். இதனையடுத்து அதனை எடுத்த பிரகாஷ் நேரடியாக அன்னூர் காவல் நிலையம் வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் உரிய விசாரணைக்குப் பின்னர் பேரூராட்சி அலுவலர் அருண் பிரகாஷிடம் ஒப்படைத்தனர்.

கீழே கிடந்த ரூ.8070 ஐ நேர்மையாகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த விற்பனை பிரதிநிதியான பிரகாஷ்-க்கு காவல் துறையினர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...