திருப்பூரில் கோவில் நிலத்தில் குப்பை கொட்டுவதாக பொதுமக்கள் புகார் மனு

கோவில் நிலத்தில் குப்பை கொட்டுவதைத் தடுத்து நிறுத்த கோரி ஊர் பொதுமக்கள் சார்பில், திருப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே, இடுவாய் கிராம பஞ்சாயத்துச் சார்பில், பொது இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு நோய் பரவலை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் அருகேயுள்ள, இடுவாய் கிராம பஞ்சாயத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், பஞ்சாயத்துப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் அப்பகுதியிலுள்ள கோவில் நிலத்தில் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் குப்பைகள் அதிகளவில் சேர்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.



மேலும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், காற்று மாசு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.



இந்நிலையில் கோவில் நிலத்தில் குப்பை கொட்டுவதைத் தடுத்து நிறுத்த கோரி ஊர் பொதுமக்கள் சார்பில், திருப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...