கிணத்துக்கடவில் விளை நிலங்களுக்குள் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தின் கலந்தாய்வு விசாரணைக்கு அதிகாரிகள் வர தாமதம் - விவசாயிகள் சாலை மறியல்!

எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் விளை நிலங்களுக்குள் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்திற்கான கலந்தாய்வு விசாரணைக்கு அதிகாரிகள் வர தாமதமானதால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் கொச்சின் பகுதியிலிருந்து வாளையாறு, கிணத்துக்கடவு, காட்டம்பட்டி வரை பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக எரிவாயு குழாய்கள் பதிப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான கலந்தாய்வு விசாரணை கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிலம் எடுப்பு துணை வட்டாட்சியர் செர்லி ஏஞ்சலா தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால், காலை 11 மணிக்கு நடப்பதாக இருந்த விசாரணை மாலை 3 மணிக்கு நடத்தப்படும் என்று அலுவலகம் முன்பு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததை விசாரணைக்கு வந்த விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.



இதனிடையே, அதிகாரிகள் வரும் வரை அலுவலகம் வாயலில் அமர்ந்திருந்த விவசாயிகள் மாலை 3 மணிக்கு மேல் ஆகியும் அதிகாரிகள் வராததால் திடீரென கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள கோவை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வந்த கலந்தாய்வு விசாரணை அதிகாரி துணை ஆட்சியர் ஷெர்லி ஏஞ்சலா மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விசாரணை நேரத்தை மாற்றியதை கண்டித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, விவசாயிகளை சமாதானப்படுத்திய போலீசார் மற்றும் அதிகாரிகள் கலந்தாய்வு விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், விவசாயிகள் கேட்ட 51 வினாக்களுக்கு பதில் அளித்தால் மட்டுமே விசாரணைக்கு உள்ளே வருவோம் என்று அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவித்து அலுவலகத்தின் வாயிலிலேயே அமர்ந்து காத்திருக்கின்றனர்.

எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும், விளை நிலங்கள் வழியாக கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...