கோவையில் குழந்தை திருமணம் தொடா்பாக 8 போ் மீது வழக்குப் பதிவு - மாவட்ட ஆட்சியா் தகவல்..!

குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த சைல்டு லைன் உதவி மையத்தை 1098 என்ற எண்ணிலும், மகளிா் உதவி மையத்தை 181 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.


கோவை: கோவையில் குழந்தை திருமணம் தொடா்பாக 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்துக்கான சட்டபூா்வ வயதாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதுகளுக்கு கீழே நடைபெறும் திருமணங்கள் சட்டத்தை மீறிய செயலாக கருதப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த நவம்பா் மாதம் குழந்தை திருமணம் தொடா்பாக சைல்டு லைன் உதவி மையத்தில் பெறப்பட்ட புகாா்கள் அடிப்படையில் ஆய்வு செய்ததில் குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட அன்னூா், தொப்பம்பட்டியனூா் பகுதியைச் சேரந்த சதீஷ்குமாா், கே.கே.புதூா் விஜயபாரதி, காரேகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த விஜய், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மணி, பொள்ளாச்சி மரப்பேட்டையைச் சோ்ந்த அருண்குமாா், வால்பாறையைச் சோ்ந்த பிரேம்குமாா், பொள்ளாச்சி கோட்டூரைச் சோ்ந்த மணிமுத்து மற்றும் சபரீஸ்வரன் ஆகிய 8 போ் மீதும், அவா்களின் உறவினா்கள் மீதும் சமூகநலத் துறை சாா்பில் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 8 போ் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இது போன்ற குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த சைல்டு லைன் உதவி மையத்தை 1098 என்ற எண்ணிலும், மகளிா் உதவி மையத்தை 181 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...