கோவையில் புத்தாண்டில் கொரோனா விதிகளை மீறும் விடுதிகள் மீது நடவடிக்கை - மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை..!

கொரோனா வழிகாட்டுதல் முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க மண்டலத்துக்கு ஒரு குழு வீதம், 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கொரோனா விதிகளை மீறும் விடுதிகள், உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், கோவையில் ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத் துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக 7 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனா். அவர்களை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள், தினமும் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு உதவிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

புத்தாண்டையொட்டி, உணவகங்கள், விடுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் என்பதால், தனியாா் விடுதிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதலை முறையாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதி மீறும் விடுதிகள் மீது அபராதம் மற்றும் சீல் வைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதேபோல, கொரோனா வழிகாட்டுதல் முறைகளை மக்கள் பின்பற்றுகிறாா்களா என்பதைக் கண்காணிக்க மண்டலத்துக்கு ஒரு குழு வீதம், 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா், தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...