கோவை வாலிபரை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவத்தில் சரணடைந்த 4-பேரிடம் விசாரணை

கோவையில் முன்விரோதம் காரணமாக வாலிபரை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவத்தில் சரணடைந்த 4-பேரிடம் சரவணம்பட்டி போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக வாலிபரை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவத்தில் சரணடைந்த 4-பேரிடம் சரவணம்பட்டி போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் ஸ்ரீராம் என்கின்ற குரங்கு ஸ்ரீராம் (22). கடந்த 20 ஆம் தேதி ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பன் கவாஸ்கான் (23) இருவரும் பைக்கில் ரத்தினபுரியில் இருந்து அஞ்சுகம் நகர் வழியாக துடியலூர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது 2 பைக்கில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஸ்ரீராம் மற்றும் கவாஸ்கானை வழிமறித்து மறைத்து வந்திருந்த வீச்சரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஸ்ரீராமை சரமாரியாக வெட்டியது. இதில் ஸ்ரீராம் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதில் கொலைவெறி கும்பலிடம் மாட்டாமல் கவாஸ்கான் தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து கொலைவெறிக் கும்பல் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, சரவணம்பட்டி காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஸ்ரீராமை வெட்டி கொன்றது முன்விரோதம் காரணமாக கோகுல் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.

இதற்காக இரண்டு தனி படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீராம் என்ற குரங்கு ஸ்ரீராமை வெட்டிக் கொன்ற வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுஜின்குமார், கோகுல், ரவீந்திரன், மணிகண்டன் ஆகிய நான்கு பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இவர்கள் நான்கு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சரவணம்பட்டி போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் கோவை அழைத்து வரப்பட்டனர்.

கோவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் நேற்று மாலை முதல் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோவை நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, அவர்களை சரவணம்பட்டி போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், கண்ணப்ப நகர் ரத்தினபுரி சிவானந்தா காலனி பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடையே பெண்களைக் காதலிப்பது மற்றும் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கூட்டமாகச் செல்லும் பொழுது ஏற்படும் வாய்த்தகராறு உள்ளிட்டவை முன் விரோதமாக ஏற்கனவே இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்ட மோதலில் ஏற்கனவே கோகுல் தரப்பினருக்கும் கொலை செய்யப்பட்ட குரங்கு ஸ்ரீராம் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக கோகுல் அவரது நண்பர்களுடன் சென்று குரங்கு ஸ்ரீராமை வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...