கோவையில் கோவில் நிலத்தில் வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்..! மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நஷ்ட ஈடு வழங்க கோரிக்கை..!!

தென்னை மரங்கள் 4, வாழைமரங்கள் 50, மாமரங்கள் 2 என கோவிலுக்கு தேவையான மரவகைகள் பயிரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவையில் கோவில் நிலத்தில் காட்டு யானைகள் சேதப்படுத்திய இடங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் முறையீட்டுக் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் விவசாய சங்கங்கள், விவசாயிகள் என பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.



இதில் சாதி, மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது:-

கோவை மாவட்டம் பேரூர் அருகே நரசிபுரத்தில் உள்ள சுந்தர பெருமாள் கோவிலுக்கு உட்பட்ட பகுதியில் 7 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் தென்னை மரங்கள் 4, வாழைமரங்கள் 50, மாமரங்கள் 2 என கோவிலுக்கு தேவையான மரவகைகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்த மரங்களில் இருந்து வாழைப்பழம், தேங்காய், மாம்பழம் போன்றவை கோவிலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதனிடையே, அண்மையில் காட்டு யானைகள் இந்த நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து மரங்களை சேதப்படுத்தியது. இதனால் கோவிலுக்கு வழங்கப்பட்டு வந்த வாழை, தேங்காய், மாம்பழங்கள் போன்றவை தற்போது வழங்கப்பட முடியவில்லை‌.

எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தேவையான நஷ்ட ஈடு வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறியதாவது:-

அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் உட்பட்ட பகுதிகளில் சுமார் 3800 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைய உள்ளது. இந்த இடத்தில் நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்காதவாறு தொழிற்பேட்டை அமைய வேண்டும். அதேபோல் தொழிற்சாலைகள் வந்த பிறகு நீர், நிலம், காற்று மாசுபட வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகளிடம் கலந்தாலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் சு. பழனிச்சாமி கூறியதாவது:-

கோவை மாவட்டம் சூலூர் அருகே கள்ளபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டயர் வேஸ்ட் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் இருந்து டயர் எரியூட்டும் போது புகைமூட்டம் அருகிலுள்ள கிராம மக்களை கடுமையாக பாதிக்கிறது.

இதனால் காற்று மாசு ஏற்படுவதுடன் நீர்நிலைகள், விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது‌. அதேபோல் இந்த கம்பெனிக்கு அருகில் மருத்துவ கழிவுகள் எரிக்கும் கம்பெனி ஒன்று செயல்படுகிறது. எனவே இப்பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், கருமத்தம்பட்டி, அன்னூர், சுல்தான்பேட்டை போன்ற பல்வேறு இடங்களில் புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்கப்பட வேண்டும். இதனால் உழவர்கள் பயன்பெறுவார்கள். மக்களும் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வேளாண்மை துறை உயரதிகாரிகள், வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...