கோவை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு களப்பணியாளர்கள் மூலம் வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம் - மாநகராட்சி ஆணையர்..!

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தண்ணீர் சேமித்து வைக்கும் சிமெண்ட் பொருட்களை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்படுத்த அறிவுறுத்தல்.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு களப்பணியாளர்கள் மூலம் வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தண்ணீர் சேமித்து வைக்கும் சிமெண்ட் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்படுத்திட வேண்டும்.

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை. ஆகையால் நல்ல நீர் தேங்கும் வாய்ப்பு உள்ள தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் டயர்க்கள், பூச்செடிகள், பெயிண்ட் டப்பாக்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்திட வேண்டும்.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 2 துடியலூர் முருகன் நகர் பகுதியில் உள்ள ஜி.ராமமூர்த்தி கட்டுமான தொழிலாளர்கள் குடியிருப்யில் அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதன் காரணமாகவும், டெங்கு காய்ச்சல் பரப்ப காரணமாக இருந்ததாலும் மாநகராட்சி அதிகாரிகளால் ரூ.50,000/ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...