கோவையில் விபத்தில் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்த தம்பதிக்கு ரூ. 14.98 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முனிராஜ், ராஜேந்திரனுக்கு இழப்பீடாக ரூபாய் 1.61 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடனும், குப்புலட்சுமிக்கு இழப்பீடாக ரூபாய் 13.37 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் விபத்தில் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்த தம்பதிக்கு ரூபாய் 14.98 லட்சம் இழப்பீடு வழங்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை நஞ்சுண்டாபுரம் பெருமாள் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65), இவரது மனைவி குப்புலட்சுமி (54), இருவரும் கடந்த 2014 ஜூன் 28-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் கோவை அரசு மருத்துவமனை அருகே சென்றனர்.

அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. விபத்து நடந்தபோது ராஜேந்திரன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து மாதம் 25,000மும், குப்புலட்சுமி தையல்காரர் ஆக வேலை பார்த்து மாதம் 20 ஆயிரமும் வருவாய் ஈட்டி வந்துள்ளனர்.

எனவே, தனக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சம் வழங்கக் கோரி ராஜேந்திரனும், ரூபாய் 8 லட்சம் வழங்கக் கோரி சுப்புலட்சுமியும் கோவை மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முனிராஜ் ராஜேந்திரனுக்கு இழப்பீடாக ரூபாய் 1.61 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடனும், குப்புலட்சுமிக்கு இழப்பீடாக ரூபாய் 13.37 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...