திருப்பூரில் சட்டவிரோதமாக குடியேறிய இளைஞர்கள் கைது

திருப்பூர் மாநகரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்காள தேச நாட்டை சேர்ந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்காள தேச நாட்டை சேர்ந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட செவந்தபாளையம் பகுதியில், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையிலிருந்த இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் திருப்பூரில் தங்கி பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த வங்காள தேச நாட்டை சேர்ந்த இளைஞர்கள் என தெரிய வந்ததையடுத்து காவல்துறையினர் வங்காள தேசத்தைச் சேர்ந்த பாரி டோல் இஸ்லாம், ரிடோய் ஹீசைன் ரிபோட், சிமூள் ரகுமான், ரே கான் ஆகிய நால்வரைக் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.



இதேபோல் திருமுருகன் பூண்டி பகுதியில், மேற்கு வங்க முகவரியுடன் போலி ஆதார் அட்டை வைத்திருந்த 5-பேரைக் காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...