பொள்ளாச்சி அருகே சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய அழைத்துச் சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே சிறுமியை திருமணம் செய்ய முயற்சித்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் 16-வயது சிறுமி காணவில்லை என்று, அவரது பெற்றோர்கள், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த 26-ம் தேதி புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சி கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் குமார்(23) டிரைவர், 16-வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்வதாக அவரை சேலத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் சேலத்தில் வைத்து சிறுமியை மீட்டனர். மேலும், சிறுமியைத் திருமணம் செய்ய முயன்ற சந்தீப் குமாரை கைது செய்த கிழக்கு போலீசார், வழக்கை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய அழைத்துச் சென்ற சந்தீப் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, செய்து அவரை சிறையில் அடைத்தனர்.