பொள்ளாச்சியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட கூலித்தொழிலாளியின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் மனு

பொள்ளாச்சி அருகே தடுப்பணையில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட கூலித்தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே தடுப்பணையில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட கூலித்தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வீரன் என்பவரது மகன் ஆறுச்சாமி. இவர் அப்பகுதியில் உள்ள சின்னத்தங்கம் கவுண்டர் என்பவர் தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் சென்றவர் திரும்பவில்லை.

இந்நிலையில், நேற்று கொள்ளுபாளையம் அருகே உள்ள தடுப்பணை தண்ணீரில் ஆறுச்சாமி இறந்த நிலையில், உடல் மிதப்பதாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலையடுத்து அங்கு விரைந்த கோமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.



அவர் உடலில் காயங்கள் இருந்ததால் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இன்று ஆறுச்சாமியின் தாயார் மற்றும் உறவினர்கள் பொள்ளாச்சிகாவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

ஆறுச்சாமி குடிபோதையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளார்கள். இரண்டு தினங்களாக அவர் வேலைக்கு வரவில்லை என்று தோட்டத்து உரிமையாளர் தகவல் தெரிவிக்கவில்லை இறந்தவருக்கு நீச்சல் நன்றாகத் தெரியும் அவர் நீரில் மூழ்கி இருக்க வாய்ப்பில்லை.

எனவே அவர் இறப்பில் சந்தேகம் உள்ளது. அவரது உடல் கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்து சாவுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...