கோவை அரசு மருத்துவமனையில் 14-குழந்தைகள் உட்பட 33-பேருக்கு டெங்கு காய்ச்சல்.!!

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட 14-குழந்தைகள் உட்பட 33-பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட 14 குழந்தைகள் உட்பட 33 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கோவை அரசு மருத்துவமனைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது. இங்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 33 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் கோவையைச் சேர்ந்தவர்கள் 28 பேர் ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் திருப்பூரைச் சேர்ந்த 2 பேர் என 33 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் குழந்தைகள், 234 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் தடுப்பு முறைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

டெங்கு வைரஸ் தாக்கம் ஏற்படும் போது பசியின்மை, அதிக உடல் சோர்வு, தலைச்சுற்றல், குறைந்தளவு சிறுநீர் வெளியேற்றம், குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வாய் பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், மலம் கருப்பாக வெளியேறுதல், மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும் இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று மாத்திரைகள் வாங்கி சாப்பிடக் கூடாது. ஓய்வு எடுக்க வேண்டும். டெங்கு வைரஸ் தாக்கத்தால் முதல் மூன்று நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும், அடுத்த 3 நாட்களுக்கு ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா வெளியேறி ஆபத்தை உண்டாக்கலாம் எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால் காய்ச்சல் நின்ற பிறகு மூன்று நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும்.

குழந்தைகளைக் காய்ச்சல் நின்ற பிறகு 4 அல்லது 5 நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு அனுப்ப வேண்டும். வேலைக்கு 4 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். காய்ச்சலின் போது கஞ்சி, பழச்சாறு, இளநீர் மற்றும் உப்பு, சர்க்கரை கரைசல் போன்ற திரவ உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

மேலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. பயன்படுத்தப்படாத பழைய பொருட்களை தண்ணீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும். பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் எனவே கொசுக் கடியிலிருந்து தப்பிக்க வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தடவிக் கொள்ளலாம், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு ஐ.ஜி.எம் பரிசோதனைகள் கோவை அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது எனவும் பரிசோதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...