கோவையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை..! பொதுமக்கள் வரவேற்பு

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, காசநோய் போன்ற தொடர் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களுக்கு 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறது - மாவட்ட தொற்றா நோய்த் தடுப்பு மருத்துவ அலுவலர் விஜயகுமார்.


கோவை: தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை, ரத்த அழுத்தம், இயன்முறை சிகிச்சை உள்பட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட தொற்றா நோய்த் தடுப்பு மருத்துவ அலுவலர் விஜயகுமார் கூறியதாவது:-

"கோவை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், காசநோய் உள்பட 10க்கும் மேற்பட்ட முக்கிய பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, காசநோய் போன்ற தொடர் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களுக்கு 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறது. அதன்படி, இதுவரை ரத்த அழுத்த நோயாளிகள் 74,109 பேருக்கும், சர்க்கரை நோயாளிகள் 36, 776 பேருக்கும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை இரண்டும் உள்ளவர்கள் 34,177 பேருக்கும், இயன்முறை சிகிச்சை 6,449 பேருக்கும், பிற நோய் பாதிப்பிற்கு 6,692 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு சென்று சிகிச்சை, 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் அளிப்பதால், பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது", இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...