கோவையில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்..!

இதில் இந்திய சுதந்திர போராட்டம் குறித்த அரிய புகைப்படங்களும், சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அனுமதி இலசவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில், எழுச்சிமிகு 75வது சுதந்திர தின கொண்டாட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் இன்று முதல் 2ம் தேதி வரை சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.



இப்புகைப்படக் கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் துவக்கி வைத்தார்.



இதில் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிக்கை தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.



இக்கண்காட்சியில் இந்திய சுதந்திர போராட்டம் குறித்த அரிய புகைப்படங்களும், சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அனுமதி இலசவம்.



மேலும், நிகழ்ச்சியில் முதல் நாளில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சிலம்பம், கரகாட்டம், பரதநாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...