கோவையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை விற்பனை கண்காட்சி..! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..!!

வரும் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக புடவைகள், போர்வைகள் வேஷ்டிகள் துண்டுகள் ஆகியவை 30 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.



இந்திய அரசு ஜவுளித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை இணைந்து நடத்தும் கைத்தறி கண்காட்சி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாவட்டத்தில் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹாலில்(மீனாட்சி ஹால்) இன்று முதல் இக்கண்காட்சி நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும் அங்குள்ள பணியாளர்களிடம் விற்பனை செய்யப்படும் துணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கண்காட்சியில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுமார் 40 சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.



அதில் சிறுமுகைப்புதூர் ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை நெசவாளர்களின் தேசிய விருது பெற்ற 6.20 மீட்டரில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்கள் அச்சிடப்பட்ட சில்க் புடவையும், 1 லட்சத்து 64 ஆயிரத்து 492 வண்ணங்களும், மீனாட்சி அம்மன் கோவில் உட்பட 7 உலக அதிசயங்கள் அச்சிடப்பட்ட புடவையும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.



வரும் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக புடவைகள், போர்வைகள் வேஷ்டிகள் துண்டுகள் ஆகியவை 30% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...