கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனத்தில் 2.5 கிலோ போதை வஸ்துக்களை கடத்தி வந்த இளைஞர் கைது..!

கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் போதை வஸ்துக்களை கடத்தி வந்து பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்கு கொடுப்பது விசாரணையில் தெரியவந்தது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் இருசக்கர வாகனத்தில் 2.5 கிலோ போதை வஸ்துக்களை கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, தலைமை காவலர் ரத்தினசாமி ஆகியோர் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பிரிவு அருகே நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்கு முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடமிருந்த 2.5 கிலோ போதை வஸ்துக்களை பறிமுதல் செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கல்லாங்காட்டுபுதூர் எஸ்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(30) கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் போதை வஸ்துகளை கடத்தி வந்து பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்கு கொடுப்பது விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...