முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி ரூ.12.66 லட்சம் மோசடி: மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு

திருப்பூரில் செயல்பட்டு வந்த 'குபேரா ஆட்டோ பைனான்ஸ்' என்ற நிறுவனம் முதலீடு செய்தால் 24 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக விளம்பரம் செய்து, 20 பேரிடமிருந்து ரூ.12.66 லட்சம் பெற்று மோசடி.


கோவை: முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி ரூ.12.66 லட்சம் மோசடி: மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருப்பூரில் செயல்பட்டு வந்த 'குபேரா ஆட்டோ பைனான்ஸ்' என்ற நிறுவனம் முதலீடு செய்தால் 24 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக விளம்பரம் செய்து, 20 பேரிடமிருந்து ரூ.12.66 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, நிறுவனத்தின் இயக்குநரான திருப்பூரை சேர்ந்த சாமிநாதன், முத்துவேல், மணிவேல் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.16 லட்சம் அபராதம் விதித்ததோடு, அபராத தொகையில் ரூ.15 லட்சத்தை முதலீட்டாளருக்கு பிரித்து அளிக்கவும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கில் இருந்து ராஜேந்திரகுமார், லோகநாயகி, செல்வி ஆகியோர் விடுவித்த நீதிபதி ரவி, தீர்ப்பின்போது ஆஜராகாத சாமிநாதன், மணிவேல் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...