பல்லடம் அரசு கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: போலீசார் விசாரணை

பல்லடம் அரசு கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக, ஆசிரியர் திட்டியது தான் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் 44. வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வரும் இவருக்கு பத்மா என்ற மனைவியும் காசி விஸ்வநாதன் 18 என்ற மகனும் உள்ளனர்.

காசிவிஸ்வநாதன் பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல கல்லூரிக்குச் சென்ற மாணவன் காசி விஸ்வநாதன் அங்கு நடைபெற்ற மாதிரி தேர்வின் போது வெற்று காகிதத்தில் ஆபாச வார்த்தைகளை எழுதியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கிருந்த துறைத் தலைவர் பால முருகன் மாணவனிடமிருந்த பேப்பரை பறித்துக் கொண்டு கல்லூரியை விட்டு விரட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. சக மாணவர்கள் முன்பு நடந்த இச்சம்பவத்தால் தலைகுனிவைச் சந்தித்த அம்மாணவன் அங்கிருந்து வெளியேறி ரோட்டோர பூச்சி மருந்துக் கடையிலிருந்து விஷ மருந்து பாட்டில் ஒன்றை வாங்கி குடித்து விட்டு இது குறித்து தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.



இதையடுத்து, அம்மாணவனை மீட்ட சக நண்பர்கள் பல்லடம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பல்லடத்தில் அரசு கல்லூரி துறைத் தலைவர் அடித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...