மாங்கரை சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளிடம் 'கூகுள் பே' மூலம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை: பழங்குடியினரிடம் லஞ்சம் வாங்கிய ஏட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய போலிசிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
கோவை ஆனைகட்டி செல்லும் வழியில் மாங்கரை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் கேரளாவிலிருந்து கோவைக்கும், கோவையிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் வாகனங்கள் சோதனை சாவடியில் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஆனைக்கட்டியில் ஆதிவாசி பெண்கள் வாழ்வாதார மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் வாழை நாரிலிருந்து யோகாசன பாய் தயாரித்தல், உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்குத் தயாரிக்கப்பட்ட வாழை நார் யோகாசனப் பாயின் ஓரப்பகுதியை தைக்கச் சின்ன தடாகத்தைச் சேர்ந்த டெய்லர் அயப்பன் என்பவரிடம் கொடுத்திருந்தனர்.
சம்பவத்தன்று இவர் யோகாசன பாயை தைத்த பின்னர் ஆனைக்கட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவல்துறை அய்யப்பனைத் தடுத்து நிறுத்தி யோகாசன பாய்க்கான பில் கொடுக்கும்படி கேட்டு உள்ளனர். அவர் பில் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் ரூ.1500 மதிப்பிலான யோகாசன பாயை பறித்து அய்யப்பனை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆதிவாசி பெண்கள் வாழ்வாதாரமாக மைய நிர்வாகி சவுந்தர்ராஜன் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்திடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி ராஜபாண்டியன் விசாரணை நடத்தினார். விசாரணையில், அங்கு பணியிலிருந்த துடியலூர் காவலர் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு முத்துசாமி என்பவர் பாயை பறித்தது தெரியவந்தது. மேலும் அங்கு பணியிலிருந்த காவலர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அவர்கள் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து பாயை பறித்த ஏட்டு முத்துசாமி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
மணிகண்டன் மற்றும் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.